டோக்யோ: வெளிநாட்டினருக்கு தொழிலாளர்கள் மட்டத்தில் வேலைவாய்ப்பு அளிக்க ஜப்பான் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஜப்பான் நாட்டினர் என்றாலே உழைப்பாளிகள் என உலகம் போற்றுவது வழக்கம். ஜப்பான் நாட்டில் வெளிநாட்டினருக்கு பணி புரிய அதிகம் வாய்ப்புக்கள் அளிக்கப்படுவதில்லை. இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அடுத்த வாரம் நடைபெற உள்ள கூட்டம் ஒன்றில் பேசப்போவதாக அறிவித்துள்ளார்.
உண்மையில் பல ஜப்பானிய தொழிலாளர்கள் மூப்பு அடைந்துள்ளதால் பல இடங்களில் கீழ் மட்ட ஊழியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணாமாக தினமும் 50000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கூடுதல் நேர பணீ (OVER TIME) அளிக்கப்படுகிறது. எனவே இந்த பற்றாக்குறையை நீக்க பிர்தமர் ஷின்சு அபே தலைமையில் அமைச்சரகக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ஜப்பான் குடியேற்ற விதிகளில் மாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டது.
இந்த விதிகள் மாற்றத்தின் படி கீழ் மட்ட தொழிலாளர்களுக்கான விசா வழங்கலில் விதிகள் சற்று தளர்த்தப்பட உள்ளன. இந்த மாறுதல்கள் மூலம் வெளிநாட்டில் இருந்து பல கீழ்மட்ட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.
தற்போது உள்ள 40% தொழிலாளர் பற்றாக்குறையில் சுமார் 28% தொழிலாளர்கள் வெளிநாட்டில் இருந்து அழைத்து வரப்படுவார்கள் எனவும் மீதமுள்ள பணிகளுக்கு உள்நாட்டு தொழிலாளர்கள்க்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.