ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ள ‘சர்கார்’ படத்தின் கதை தன்னுடைய கதை என உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து, ‘சர்கார்-செங்கோல்’ ஆகிய இருகதைகளும் ஒன்றுதான் என சங்க தலைவர் பாக்யராஜ் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, இப்பிரச்சனை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த விவகாரம் சென்னை நீதிமன்றத்திற்கு சென்றபோது, சர்கார் கதை வருணுடையதுதான் என முருகதாஸ் ஒப்புக்கொண்டார். இதனால், இப்படத்தின் மீதான விவாதம் நிறைவடைந்தது. இந்நிலையில், கே.பாக்யராஜ் தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தலைவர் பதவியை சற்றுமுன் ராஜினாமா செய்துள்ளார்.
இதையடுத்து , அவர் பேசுகையில்,முருகதாஸ் உடன்படாததால் வேறு வழியே இல்லாமல் சன் பிக்சர்ஸ் போல ஒரு பெரிய நிறுவனத்தின், மிகப் பெரிய படமான ‘சர்கார்’ படக்கதையை நான் வெளியே சொல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். இருந்தாலும் தவறு என உணர்ந்து சம்மந்தப்பட்ட சன்பிக்சர்ஸ் தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கோருகிறேன் என தெரிவத்தார். கே.பாக்யராஜ் சங்கத்தலைவர் பதிவியில் இருந்து விலகியிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.