ரயில்களில் முன்பதிவு செய்யாத பயணத்திற்கு புதிய ஆப் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த திட்டம் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.
குறிப்பாக ரயில்களில் முன்பதிவு செய்யாத பயணத்திற்கு புதிய ஆப் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதியை நவம்பர் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட வரிசையில் நிற்க வேண்டி சூழல்: மேலும் இப்போது ரயில் பயணத்திற்கான முன்பதிவு டிக்கெட்களைப் பெற இணைய வசதி மொபைல் ஆப் என பல்வேறு வசதிகள் உள்ளன, இருந்தபோதிலும் முன்பதிவில்லா டிக்கெட்டுகளைப் பெறவதற்கு நீண்ட வரிசையில் நிற்க வேண்டி சூழல் உள்ளது.
முன்பதிவில்லா டிக்கெட்: முன்பதிவில்லா டிக்கெட் பயணிகளுக்கு உதவும் வகையில்இ யுடிஎஸ்ஆன்மொபைல் (utsonmobileapp) என்ற ஆப் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த ஆப் வசதி குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது இந்த சேவை நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு: இந்த ஆப் வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களில் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,பின்பு இதில் முன்பதிவில்லாத பயணச்சீட்டு மட்டுமின்றி பருவ பயணசீட்டு மற்றும் நடைமேடை சீட்டு உள்ளிட்டவற்றையும் பெற்றக்கொள்ளமுடியும்.
புதிய ஆப் வசதி: இப்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய ஆப் வசதி கண்டிப்பாக அனைத்து மக்களுக்கும் பயன்படும், மேலும் விரைவில் ஐஆர்சிடிசி பல்வேறு புதிய ஆப் வசதிகளை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.