டில்லி: பராமரிப்பு பணி காரணமாக இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் இணைய தளம் (irctc.co.in) வரும் 9ந்தேதி நள்ளிரவு தற்காலிகமாக முடக்கிவைக்கப்படும் என ஐஆர்டிசி அறிவித்து உள்ளது.
அந்த நேரத்தில், ரயில் டிக்கெட் இணைய புக்கிங் போன்ற முக்கியமான சேவைகளை பயணிகள் பயன்படுத்த இயலாது எனவும் தெரிவித்துள்ளது. மேலும் ரயில்வே சேவை தொலைபேசி எண்னான 139-ம் அந்தே நேரத்தில் செயல்படாது என அறிவித்துள்ளது.
கடந்த மே மாதம் ஐஆர்டிசி புதுக்கப்பிட்ட இணையதளம் பயன்பாட்டுக்கு வந்த நிலையில், அப்போது முதல், ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையம் (CRIS) உருவாக்கப்பட்டது. இந்த புதிய வலைப்பக்கத்தில் காத்திருப்பு-பட்டியல், பட்டியலிடப்பட்ட டிக்கெட்களை உறுதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் போன்றவை அறிமுகம் செய்யப்படது.
இந்த நிலையில் தற்போது பராமரிப்பு பணிகாக இணையதளம் சுமார் அரை மணி நேரம் முடக்கி வைக்கப்படுகிறது. அதாவத 9ந்தேதி நள்ளிரவு 00:20 மணி முதல் 01:30 ( 10/11/2018) மணி வரை “அனைத்து முனையத்திற்கும் முன்பதிவு மற்றும் ரத்துசெய்தல்” போன்ற சேவைகள் முடக்கி வைக்கப்படும்.
அதேபோல் டில்லி முனையத்திற்கு 09/11/2018 அன்று 11.45 மணி முதல் 10/11/2018 அன்று 01.40 மணி வரை பராமரிப்பு செயல்திறன் காரணமாக முன்பதிவு மற்றும் ரத்துசெய்தல் போன்ற சேவைகள் முடக்கி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.