சென்னை: தமிழகத்தில், ரேஷன் கடைகளுக்கு, மாதம்தோறும் முதல் மற்றும் இரண்டாவது வெள்ளிக்கிழமை விடுமுறை. அதற்கு மாற்றாக, அந்த வார ஞாயிற்று கிழமைகளில் செயல்படும்.தீபாவளியை முன்னிட்டு, ரேஷன் கார்டுதாரர்கள், சிரமமின்றி உணவு பொருட்களை வாங்க, விடுமுறை தினமான, 2ம் தேதி, ரேஷன் கடைகள் செயல்பட்டன.
அதனால், மூன்றாவது வெள்ளிக்கிழமையான, 16ம் தேதி, ரேஷன் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.அந்த வாரம் ஞாயிற்றுக் கிழமையும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.