கஜா புயலின் மையப் பகுதி நாகை- வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. புயலின் மையப் பகுதி நள்ளிரவு 12.30 மணிக்கு கரையை கடக்க ஆரம்பித்து நள்ளிரவு 2.30 க்கு முழுவதுமாக கரையை கடந்தது. தற்போது புயலின் பின் பகுதி கரையை கடந்து வருகிறது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று அதாவது மணிக்கு 100 கிலோமீட்டருக்கு மேல் காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக தஞ்சாவூர் , பட்டுக்கோட்டை பிரதான சாலையில் பல இரங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நாகை கடலோர பகுதி கிராமங்களில் பலத்த காற்று மற்றும் மழையால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவையாரு, காரக்கால் , பாண்டிச்சேரி. நாகை, வேதாரண்யம், பாம்பன் பகுதியில் சூறை காற்று வீசி வருகிறது. கஜா புயலின் பின் பகுதி அதிகாலை 4 மணி அளவில் முழுவதுமாக கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது.