கர்நாடக மாநிலம் பெங்களூரில் செயல்பட்டு வரும் எச்எம்டி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
மொத்த காலிப் பணியிடம் : 43
பணி மற்றும் பணியிட விபரம் :-
பொது மேலாளர் : 01
பிராந்திய மேலாளர் : 09
விற்பனை துணை மேலாளர் : 14
இணை பொது மேலாளர் : 06
நிர்வாகத் துணை மேலாளர் : 07
உதவி மேலாளர் : 06
கல்வித் தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் முடித்தவர்கள், எம்பிஏ, சிஏ, சிஎம்ஏ முடித்து பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியுடையோர் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.hmtindia.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை தகுந்த சான்றுகளுடன் அஞ்சல் செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: The Deputy General Manager (CP & HR) HMT Machine Tools Limited, HMT Bhavan, No.Bellary Road, Bangalore – 560 032
விண்ணப்பக் கட்டணம்: ரூ.750
கட்டணம் செலுத்தும் முறை: HMT Machine Tools Limited என்னும் பெயரில் பெங்களூரில் மாற்றத்தக்க வகையில் வரவோலை எடுத்து விண்ணப்பத்துடுன் இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய இறுதி நாள்: 2018 நவம்பர் 26 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய www.hmtindia.com என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.