சுற்றுச்சூழல், தொழில்நுட்பம், விண்வெளி, ரோபோடிக்ஸ், சமுதாயம், பயணம், உணவு, ஆற்றல், சுகாதாரம் மற்றும் ஆர்டிபிஷியல் இண்டலிஜன்ஸ் உள்ளிட்ட பத்து பிரிவுகளில் ஏதேனும் ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்து மாணவர்கள் தங்களது ஆராய்ச்சியை மேற்கொள்ளலாம். இதில், தனி நபராகவோ அல்லது இரண்டு முதல் மூன்று நபர்களைக் கொண்ட குழுவாகவோ போட்டிக்கு விண்ணப்பிக்கலாம் என கூகுள் அறிவித்துள்ளது.

கூகுள் அறிவியல் போட்டி பரிசுகள்:

*உலகளவில் முதல் இடம் பெறும் மாணவருக்கு “கிராண்ட் பிரைஸ்” வகையில் 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 35 லட்சத்து 69 ஆயிரம் அவர்களது உயர்கல்விக்கான உதவித் தொகையாக கூகுள் நிறுவனம் வழங்கும்.

*லீகோ கல்வி நிறுவனம் சார்பாக 15,000 அமெரிக்க டாலர்கள் பரிசாகவும், டென்மார்க்கில் உள்ள லீகோ நிறுவனத்தைச் சுற்றி பார்க்கும் வாய்ப்பு.

*நேஷனல் ஜியோகிராபிக் நிறுவனம் சார்பாக, “எக்ஸ்ப்ளோரர் அவார்ட்”, 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மற்றும் களேபாகோஸ் தீவுகளுக்கு 15 நாட்கள் கல்வி சுற்றுலா.

*சயின்டிபிக் அமெரிக்கன் நிறுவனம் சார்பாக “இனோவேட்டர் அவார்ட்” என்னும் விருது மற்றும் 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் கல்வி உதவித்தொகை.

*சிறந்த தொழில் நுட்பம் சார்ந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட மாணவருக்கு காலக்டிக் நிறுவனம் சார்பாக “பயனீர் அவார்ட்”-ஆக 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள்.

*சிறந்த முறையில் தங்களது மாணவர்களை ஊக்குவித்து அவர்களுக்குத் துணை நின்ற ஆசிரியருக்கு, லீகோ நிறுவனத்தின் சார்பாக “இன்ஸ்பயிரிங் எஜூகேட்டர் விருது” மற்றும் கல்வி சார்ந்த பொருட்களை வாங்குவதற்காக 5 ஆயிரம் அமெரிக்க டாலர்கள்.

*உலக அளவில் இறுதி போட்டிக்குத் தகுதி பெற்ற 20 மாணவர்களுக்கு அமெரிக்காவில் உள்ள கூகுள் நிறுவனத்தைச் சுற்றி பார்க்கும் வாய்ப்பு.

*மாநில அளவில் வெற்றி பெறும் 53 மாணவர்களுக்கு “ஆண்ட்ராய்ட் டேப்ளெட்” மற்றும் இதர பரிசுகளும், 100 ரீஜினல் வெற்றியாளர்களுக்குப் பரிசாக “குரோம்புக்” மற்றும் இதர பரிசுகள் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் போட்டிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில், ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 2018 டிசம்பர் 12 இதுகுறித்தான மேலும் விபரங்களை அறிய www.googlesciencefair.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *