டிசம்பர் 4-ஆம் தேதி தமிழகம் மற்றும் ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் கனமழை வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
கிழக்கு திசை காற்றின் வேகம் மற்றும் அது செல்லும் திசை மாறுபடுவதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (டிச.1) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் வெள்ளிக்கிழமை கூறினார்.
இந்நிலையில், இந்த புதிய கிழக்கு திசை காற்று வரும் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் கடக்க உள்ளது. இதனால் டிசம்பர் 4-ஆம் தேதி தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.