மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (யு.பி.எஸ்.சி.) சார்பில் நடத்தப்படும் குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வை முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக யுபிஎஸ்சி நடத்தி வருகிறது.
2019 ஆம் ஆண்டுக்கான இந்த தேர்வில் ஏற்கெனவே முதல்நிலைத் தேர்வு நடந்து முடிந்துவிட்ட நிலையில், இரண்டாம் கட்டமான முதன்மைத் தேர்வு கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 7 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி இப்போது வெளியிட்டுள்ளது. வெற்றி பெற்றவர்களின் வரிசை எண், பெயர்களுடன் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் இறுதிக் கட்டமான நேர்முகத் (பர்சனாலிட்டி) தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
நேர்முகத் தேர்வானது 2019 பிப்ரவரி 4 ஆம் தேதி தொடங்கி நடத்தப்பட உள்ளது. இந்த நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதத்தை தகுதி பெற்ற அனைவரும் www.upsc.gov.in, www.upsc.gov.in, www.upsconline.in ஆகிய இணையதளங்களிலிருந்து 2019 ஜனவரி 8 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.” rel=”noopener” target=”_blank”>www.upsconline.in ஆகிய இணையதளங்களிலிருந்து 2019 ஜனவரி 8 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.