தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுநிலை, அதே இடத்தில் நீடித்து வருகிறது. இது தமிழகத்துக்கு வெகு தொலைவில் இருப்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை.
கடந்த அக்டோபர் 1 முதல் டிசம்பர் 26-ம் தேதி வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வழக்கமாக 434 மி.மீ (சராசரி) மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை 336 மிமீ மழை தான் பெய்துள்ளது. இது வழக்கத்தை விட 23 சதவீதம் குறைவு. சென்னையில் 775 மிமீ மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை 352 மிமீ மட்டுமே பெய்துள்ளது. இது இயல்பை விட 55 சதவீதம் குறைவு. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.