பித்தம் என்றால் என்ன?

உணவு செரிமானம் ஆன பின் உடலில் சிறிது பித்தம் தங்குகிறது. இது இரைப்பபயிலும், சிறு குடலிலும் ஒட்டி கொள்கிறது. இந்த பித்த நீர் வீரியம் உள்ள புளிப்பு தன்மை (Like HYDRO CHOLORIC ACID) உடையது. இது உடலில் தங்கி இருந்தால் அஜீரணம், வயிற்று வலி, வயிற்று புண் போன்ற வியாதிகள் ஏற்பட்டு, பித்தபையும், கல்லீரலும் பாதிக்கப்படுகிறது. மேலும் எஞ்சிய பித்த நீர் உடலில் இரத்ததில் கலந்து உடலில் பல மாறுதல்களை ஏற்படுத்துகிறது. எனவே, எஞ்சிய பித்த நீர், நமது பல நோய்களுக்கும் காரணமாக இருக்கின்றது.

பித்த‌ம் ‌பிர‌ச்சனைக‌ள் ‌தீர எளிய வ‌ழிமுறைக‌ள்:

*எலுமிச்சை பித்தத்தை குறைக்கும்.

*தனியாவும் இஞ்சியும் ஜீரணத்தை அதிகரிக்கும்.

*உலர் திராட்சை மலச்சிக்கலை போக்கும்.

*தேன் வயிறு பிரச்சனைகளை சரிசெய்யும்.

*பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.

*அகத்திகீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.

பித்தம் குறைய தேவையான பொருட்கள் :

*இஞ்சி – 25 கிராம்

*கொத்தமல்லி விதை (தனியா) – 2 ஸ்பூன்

*எலுமிச்சை – 1

*உலர் திராட்சை – 10

*பூண்டு – 4 துண்டுகள்

*தேன் – 1 ஸ்பூன்

செய்முறை :

1.இஞ்சியின் தோலைப் சீவி, சிறு துண்டுகளாக வெட்டவும்.
2.தனியா, உலர் திராட்சை, பூண்டு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு அரைக்கவும்.
3.பின் இதனை வடிகட்டவும்.
4.எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்க்கவும்.
5.இதை மாதம் ஒருமுறை குடிக்கலாம், அல்லது எண்ணெய் பதார்த்தம் கலந்த உணவை உண்டபின் இதனை அருந்தினால் பித்தம் குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *