சென்னை: தமிழக கடலோர பகுதிகளில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குளிர்காலம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்திய பெருங்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதியில் மழை மேகங்கள் உருவாக துவங்கியுள்ளன.
வங்கக்கடலை ஒட்டியுள்ள தென்மேற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதியை நோக்கி மேக கூட்டங்கள் ஈர்க்கப்படுவதால் தமிழக கடலோர பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
எனவே தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.