சென்னையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் பேருந்து நிலையம் வரை அரசாங்க நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் கடைகள் கட்டியுள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு சென்னை மாநகராட்சி சட்டபூர்வமான நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மாநகராட்சி அனுப்பியுள்ள நோட்டீஸில் மார்ச் மாதம் 27ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்பாளர்கள் அனைவரும் ஆக்கிரமித்துள்ள நிலத்தை காலி செய்யுமாறும், அரசாங்க நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வது சட்டவிரோதமான செயல் என்றும் கூறியுள்ளது.

ஏற்கனவே மஞ்சள் நிறத்தில் சென்னை மாநகராட்சி குறித்தது போல சாலையின் மேற்கு பக்கத்தில் இருந்து 12 அடி இடம் சாலையினை ஆக்கிரமித்துள்ள இடமாகும் என்றும் கிழக்கு பகுதியில் உள்ள கடற்கரை மணல் பரப்பில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடம் என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்படுள்ளது.

ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்களை காலி செய்யாவிட்டால் சட்டரீதியாக மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வரும் 28ஆம் தேதியன்று மாநகர காவல்துறை உதவியோடு ஆக்கிரமிப்பு இடங்கள் அகற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகளின் இந்த நோட்டீஸ் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English Summary : Chennai corporation sends notice for those who occupies government lands from light house to Pattinapakkam bus stand.