டெல்லி: டெல்லியில் 70 ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டத்தை அடுத்து ராஜபாதையில் தேசியக் கொடியை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றிவைத்தார்.
நாடு முழுவதும் 70ஆவது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் ராஜபாதை விழாக் கோலம் பூண்டது.
டெல்லியில் கொண்டாடப்பட்ட குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக தென்னாபிரிக்க அதிபர் சிறில் ராமபோசா பங்கேற்றார். ராஜபாதைக்கு வந்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தச் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக அமர்ஜவான் ஜோதி (போர் வீரர்கள் நினைவிடம்) நினைவிடத்தில் மோடி மரியாதை செலுத்தினார்.
போரில் வீரமரணடைந்த காஷ்மீர் ராணுவ வீரர் நசீர் அகமதுவின் மனைவியிடம் அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது. காஷ்மீரில் ஷோபியானில் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் கடந்த நவம்பர் மாதம் வீரமரணமடைந்தார் நசீர்.