சென்னையில் தயாரிக்கப்பட்ட அதிநவீன தொடர் வண்டிஇலங்கையில் கொழும்பு-யாழ்ப்பாணம் இடையே உத்தரதேவி என்ற பெயரில் அறிமுகப் படுத்தப்பட்டு நேற்று தனது முதல் பயணத்தைத் தொடங்கியது. இலங்கையில் உள்நாட்டுப் போரால் கொழும்பு- யாழ்ப்பாணம் இடையே இயக்கப் பட்ட தொடர் வண்டிசேவை நிறுத்தப்பட்டிருந்தது.
2009-ல் போர் முடிடைவந்த பிறகு இந்திய அரசின் நிதி உதவியுடன் வட மாகாணத்துக்கு தொடர் வண்டிபாதை, இந்திய தொடர்வண்டித் துறையின் அங்கமான இர்கொன் (IRCON) நிறுவனத்தி னால் அமைக்கப்பட்டு 2014 முதல் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கும், 2015-ல் கொழும் பில் இருந்து தலைமன்னாருக்கும் மீண்டும் தொடர் வண்டிசேவை தொடங்கியது.
இரு நாடுகளுக்கும் இடையே நல்லிணக் கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தியா, இலங்கைக்கு 13 பெட்டிகள் கொண்ட அதிநவீன 6 டீசல் ஓட்டுவிசை (ஓட்டுவிசை (எஞ்ஜின்)) ரயில்களை தயாரித்துத் தரும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இவற்றில் முதல் தொடர் வண்டிசென்னையில் உள்ள ஐசிஎஃப் நிறுவனத் தால் தயாரிக்கப்பட்டு சமீபத்தில் சரக்குக் கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கொழும்பு-யாழ்ப்பாணம் இைடயே அறிமுகப்படுத்தப்பட்ட உத்தரதேவி ரயில். (அடுத்தபடம்) ரயிலைப் பார்வையிடும் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா. உடன் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, இந்திய தூதர் தரஞ்சித்சிங்சந்து.
இந்த தொடர் வண்டியில் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் 2, உயர் வகுப்புப் பெட்டிகள் 2, ஓட்டுவிசை (ஓட்டுவிசை (எஞ்ஜின்))களுடன் கூடிய 2 பெட்டிகள், இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் 7-ம் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 724 பேர் அமர்ந்து பயணிக்கலாம். இலங்கையில் தொடர் வண்டிதடங்கள் கடற்கரைப் பகுதிகளில் அதிகளவில் அமைந்துள்ளதால், உப்புக் காற்றால் ஏற்படும் துரு மற்றும் அரிப் பைத் தடுக்கும் வகையில் இந்த ரயிலின் வெளிப் புறமும், முக்கியப் பாகங்களும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளன.
1,800 எச்பி குதிரைத் திறன் கொண்ட இந்த ஓட்டுவிசை (ஓட்டுவிசை (எஞ்ஜின்)) டீசல் மற்றும் மின்சாரத்தின் மூலம் இயங்கக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டது.
இந்த தொடர் வண்டியில் குளிர்ச்சாதனப் பெட்டியின் இருக்கைகள் சுழலும் வசதியும், தகவலுக்காக எல்சிடி திரைகளும் உண்டு. ஒவ்வொரு இருக்கை யிலும் கைபேசியை சார்ஜ் செய்யும் வசதியும், தனித்தனியாக இசையையும் கேட்கவும் முடியும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்காக சக்கர நாற் காலியுடன் செல்லும் வசதியும் அமைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் தயாரிக்கப்பட்ட இந்த அதிநவீன தொடர் வண்டிஇலங்கையில் உத்தரதேவி என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டு கொழும்பில் உள்ள கோட்டை தொடர் வண்டிநிலையத்திலிருந்து யாழ்ப் பாணத்திலுள்ள காங்கேசன்துறை தொடர் வண்டிநிலை யம் வரையிலான பயணத்தை நேற்று (ஜன.27) தொடங்கியது.
இதனை இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா தொடங்கி வைத்து கோட்டை தொடர் வண்டிநிலையத்தில் இருந்து மருதானை தொடர் வண்டிநிலையம் வரையிலும் பயணித்தார். இந்நிகழ்ச்சியில் அந்நாட்டு போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, இலங்கைக்கான இந்திய தூதர் தரஞ் சித் சிங் சந்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.