உலக அளவிலான கச்சா இரும்பு உற்பத்தியில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளிவிட்டு இரண்டாம் இடத்தை இந்தியா பெற்றுள்ளது. உலக இரும்பு சங்கம் என்கிற அமைப்பு தான் உலகில் உற்பத்தி செய்யப்படும் இரும்பு நிறுவனங்களை தன் உறுப்பினர்களாக வைத்துக் கொண்டு இந்த கணக்கீடுகளை வெளியிடுகிறது. உலக இரும்பு சங்கம் என்கிற அமைப்பு தான் உலகில் உற்பத்தி செய்யப்படும் இரும்பு நிறுவனங்களை தன் உறுப்பினர்களாக வைத்துக் கொண்டு இந்த கணக்கீடுகளை வெளியிடுகிறது.
அந்தவகையில் உலக இரும்பு வர்த்தக அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு (2018) சீனா 928.3 மில்லியன் டன் இரும்பை உற்பத்தி செய்துள்ளது. அதே சமயம் இந்தியா 106.5 மில்லியன் டன் இரும்பை உற்பத்தி செய்து ஜப்பானை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்தியாவின் கச்சா இரும்பு உற்பத்தி 2017-ல் 101.5 மெட்ரிக் டன்னாக இருந்தது.
இதுவரை இரண்டாம் இடத்தில் இருந்த ஜப்பானின் கச்சா இரும்பு உற்பத்தி 0.3 சதவீதம் குறைந்தது. இதனையடுத்து, ஜப்பானை பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தியா இரண்டாம் இடத்தைப் பிடித்தது. உலக அளவிலான கச்சா இரும்பு உற்பத்தி 1.808.6 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. 2017-ம் ஆண்டைவிட 4.6% அதிகமாகும்.
கச்சாக இரும்பு உற்பத்தியில் உலக அளவில் அமெரிக்கா 4-ம் இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 5-ம் இடத்திலும்,ரஷ்யா 6-ம் இடத்திலும், ஜெர்மனி 7-வது இடத்திலும், துருக்கி 8-வது இடத்திலும், பிரேசில் 9-வது இடத்திலும் மற்றும் ஈரான் 10-வது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.