இன்றைய உலகில் அதிமானோருக்கு மிகப்பெரிய கவலையே உடல் எடை அதிகரிப்பு தான். இந்த உடல் எடை அதிகரிப்பால் பல நோய்கள் ஏற்படுகிறது. இதற்க்கு நாம் செயற்கையான முறையில் மருத்துவங்களை மேற்கொள்ளும் போது, பல பக்க விளைவுகள் ஏற்படக் கூடும். உடல் எடை எடை அதிகரிப்பை நாம் இயற்கையான முறையில் மேற்கொள்ளும் போது நல்ல தீர்வை காணலாம்.
அதிகமான புரதம்: நாம் நமது உணவில் அதிகமான புரதங்களை சேர்த்துக் கொள்ளும் போது, உடல் எடையை குறைக்கலாம். புறத்தில் இருக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்தானது உடலின் எடையை குறைக்க உதவுவதோடு மட்டுமன்றி, வளர்சிதை மாற்றத்தையும் ஏற்படுத்துவதற்கு இது உதவுகிறது. காலை உணவில் அதிகளவிலான புரதம் உணவில் இருக்குமாறு சாப்பிட வேண்டும்.
தண்ணீர்: தண்ணீர் நமது உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதுவும், உணவும் உட்கொள்ளுவதற்கு முன் தண்ணீர் குடிக்கும் போது, இது உடலின் உள்ள கொழுப்பை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
காபி: நம் விரும்பி அருந்து காபியானது ஒரு ஆரோக்கியமான பானமாகும். இந்த காபியில் ஆக்சிஜனேற்றமும் மற்றும் பிற கலவைகளை நிறைந்திருப்பதால் காபி உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் பிளாக் காபி உடல் எடையை குறைக்க கூடிய மிக சிறந்த பானமாகும்.
பழங்கள் மற்றும் காய்கறிகள்: நமது உடல் எடையை குறைப்பதற்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் பெரிதும் உதவுகிறது.இந்த ஆரோக்கியமான உணவுகள் நமது உடலை ஆரோக்கியத்தோடு வைப்பதோடு, அதிகமான நீர் ஆதாரங்களை உடலுக்கு தருகிறது. அதிகமாக பழங்களை சாப்பிடும் போது, மக்கள் வேகமாக எடை இழக்க நேரிடும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றனர்.
மெதுவாக சாப்பிடுங்கள்: நாம் உணவை சாப்பிடும் போது மெதுவாக சாப்பிட வேண்டும். வேகமாக உணவை சாப்பிடும் பொது உடலானது உணவை முழுமையாக உணராமல் அதிகமான கலோரிகளை சாப்பிடுகிறோம் என்று காட்டும். மெதுவாக சாப்பிடும் போது, எடை இழப்புதான் தொடர்புடைய ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரிக்கும்.