பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வட சென்னை, மத்திய சென்னை மற்றும் தென் சென்னை பாராளுமன்ற தொகுதிகளில் பொது சுகாதாரத் துறையின் சார்பாக நாளை (பிப்.16) முதல் சுகாதாரத் திருவிழா மற்றும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இந்த முகாம்களில் சிறப்பு மருத்துவர்கள் மூலம் காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு மற்றும் மஞ்சள் காமாலை சிகிச்கைகள், மகப்பேறு மற்றும் மகளிர் நல சிறப்பு சிகிச்சைகள், இரத்த பரிசோதனைகள், இசிஜி, ஸ்கேன், மார்பக பரிசோதனை கருப்பைவாய் புற்றுநோய், நீரிழிவு நோய், இருதய நோய், காச நோய், இரத்த சோகை பரிசோதனை, கண்டறியப்பட்ட நோய்களக்கான தொடர் சிகிச்சை மற்றும் பரிந்துரைகள் வழங்கப்படும். பிப்ரவரி 16, 23, 28 ஆகிய தேதிகளில் இந்த முகாம் நடைபெறுகிறது.
பொதுமக்கள் இந்த மருத்துவ முகால் கலந்துகொண்டு உரிய மருத்துவ சிகிச்சைகளை பெற்று பயடையுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் கேட்டுக்கொண்டுள்ளார்.