சென்னையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி
உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம்
கட்டுமானப் பொருட்கள் மற்றும் எலெக்ட்ரிக் கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி
அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள் மற்றும் சாலைப் பணிகள் சென்னையில் அனுமதிக்கப்படும்
சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த சார்ந்த நிறுவனங்கள் 25 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்
மொபைல், கம்ப்யூட்டர், வீட்டு உபயோகப் பொருள் விற்பனை மையங்கள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி
பிளம்பர், எலக்ட்ரீஷியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்டோர் உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற்று பணிபுரியலாம்
சென்னை மாநகராட்சி ஆணையர் அல்லது சம்மந்தப்பட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று பணிபுரியலாம்
நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தற்போதுள்ள ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்
வீட்டுவேலை பணியாளர்கள், சிறப்பு தேவைகள் உள்ளோருக்கான உதவியாளர்கள், அனுமதி பெற்று பணிபுரியலாம்
கிராமப்புறங்களில் உள்ள தனிக்கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்
மாநகராட்சி, நகராட்சிகளுக்கு வெளியே உள்ள அனைத்து தொழிற்சாலைகளும், நிபந்தனைகளுடன் செயல்பட அனுமதி
50 சதவீத பணியாளர்களை கொண்டு, குறைந்தபட்சம் 20 நபர்களுடன் இயங்க தொழிற்சாலைகளுக்கு அனுமதி
நகராட்சி, மாநகராட்சிகளில் மால்கள் தவிர்த்து அனைத்து தனிக்கடைகளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி
தனிக்கடைகள் செயல்பட சூழ்நிலைக்கேற்ப மாவட்ட ஆட்சியர்கள் அனுமதிக்கலாம்
மத்திய அரசு, மாநில அரசு அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் தொடர்ந்து செயல்படும்
சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்கள், கிராமப்புற தொழில்கள் செயல்பட தனி அனுமதி தேவையில்லை
பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள் செயல்படாது
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைப்படி எவ்வித தளர்வும் இன்றி ஊரடங்கு முழுமையாகக் கடைப்பிடிக்கப்படும்
சென்னையில் மட்டும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 10 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி
சென்னை தவிர்த்து பிற பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி
திருமண நிகழ்ச்சிகளுக்கு தற்போதுள்ள நடைமுறைகள் தொடரும்
இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி
மின்னணு ஹார்டுவேர் உற்பத்தி நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி
பொதுமக்களுக்கான விமான, ரயில், பொது பேருந்து போக்குவரத்துக்கான தடை நீடிக்கும்
தக்க அனுமதி வழங்கி, வரும் 6ஆம் தேதி முதல் தொழிற்சாலைகள் செயல்பட நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்
நோய்த்தொற்று குறையக் குறைய தமிழ்நாடு அரசு மேலும் பல தளர்வுகளை அறிவிக்கும்
ஊரடங்கை மே 4 முதல் மே 17ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டித்து உத்தரவு
கிராமப்புறங்களில் உள்ள ஒருங்கிணைந்த நூற்பாலைகள், 50 சதவீத பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்
செங்கல் சூளைகள், கல்குவாரிகள், எம்-சாண்ட், கிரஷர்கள் மற்றும் அவற்றிற்கான போக்குவரத்து செயல்படலாம்
நகரப் பகுதிகளில் பணியாளர்களை நிறுவனங்கள் தாங்கள் இயக்கும் பிரத்யேக பேருந்துகள், வேன்கள் மூலம் பணிக்கு அழைத்து வரலாம்