கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர (containment zone) பிற பகுதிகளில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்டவை 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் என்று மத்திய அரச அறிவித்திருந்தது.

இந்த நிலையில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் அலுவலகங்களில் பின்பற்றப்பட வேண்டிய, கொரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி,

  • நிறுவனத்தின் நுழைவாயிலில் கண்காணிப்பு கேமிரா மூலம் நோய் பரவலை (Tracking contacts) கண்காணிக்க வேண்டும்
  • தேவையற்ற பார்வையாளர்களை அனுமதிக்கூடாது
  • உணவு அருந்தும் இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் ஒருமுறை மட்டும் பயன்படும் தட்டுகளை உபயோகிக்க வேண்டும்
  • பணியாளர்களுக்கு (Infra Red) தெர்மா மீட்டர் மூலம் உடல் வெப்பநிலையை தினமும் கண்டறிய வேண்டும்
  • பணிநேர மாற்றத்தின்போது (Shift) பணியாளர்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் வகையில், இரண்டு ஷிப்ட்களுக்கு இடையே 30 நிமிடம் இடைவெளி இருக்கும்படி பணிநேரத்தை மாற்றியமைக்க வேண்டும்
  • பணியாளர்கள் அனைவரும் முககவசம் அணிந்திருப்பதை கட்டாயமாக்க வேண்டும்.
  • 55 வயதுக்குட்பட்ட பணியாளர்கள், வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் வீட்டில் இருந்தே பணியாற்ற ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகளை அரசு வகுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *