முதல் கட்டமாக முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் அடங்கிய சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 20 முதல் 24ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இதில் 668 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.
இதையடுத்து, பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நாளை (செப்.10) தொடங்கி நவம்பர் 13 ஆம் தேதி வரை நான்கு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் 1.57 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
• செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை முதல் கட்டமாகவும்,
• செப்டம்பர் 25 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும்,
• அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை மூன்றாம் கட்டமாகவும்,
• அக்டோபர் 29 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நான்காம் கட்டமாகவும்
கலந்தாய்வு நடைபெறும்.
துணை கலந்தாய்வு நவம்பர் 15 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை இணையதளம் மூலம் நடைபெறும். ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியருக்கான கலந்தாய்வு நவம்பர் 19 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை இணையதளம் மூலம் நடைபெறும்.