வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20-ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் கடந்த ஆண்டுகளை விட, இந்தாண்டு அதிக புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 01 ஆம் தேதி முதல் செப்டெம்பர் 30 ஆம் தேதி வரை தென்மேற்கு பருவமழை காலம் எனவும், அக்டோபர் 01 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை காலம் என கணக்கிடப்படுகிறது. அதன் படி, நேற்றுடன் தென் மேற்கு பருவமழை முடிவடைந்து, இந்திய நிலப்பரப்பில் இருந்து விலகி வருவதால், அக்டோபர் 15ம் தேதிக்கு பின் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என கூறப்பட்டது.
மேலும், இந்த ஆண்டு தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஆண்டு இயல்பை காட்டிலும் 45 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை விடை பெறும் நிலையில் வடகிழக்கு பருவமழை இந்த மாதம் 20-ம் தேதி தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.