ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் எம் ஆட்டோ பிரைடு என்ற மின்சார ஆட்டோ சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு 10 எலக்ட்ரிக் ஆட்டோக்களை ஓட்டுனர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
இது முழுமையாக மின்சக்தியில் இயங்கும் முதல் மூன்று சக்கர வாகனமாகும். பயணிகள் நலனுக்காக குறைந்த கட்டணத்தில் இந்த எலக்ட்ரிக் ஆட்டோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போன் செய்தால் 10 நிமிடங்களில் ஆட்டோ உங்கள் வீடு தேடிவரும்.
இதனை செயலி மூலம் பயன்படுத்தி, மின்னணு முறையில் பணத்தைச் செலுத்தலாம். நேரடியாகவும் பயணிகள் பயன்படுத்தி கொள்ளலாம். தொடக்க சலுகையாக ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.12 என்ற கட்டணத்தில் இந்த சேவை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.