சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வரும் புறநகர் மின்சார ரயில்களில் பெரும்பாலானவை 12 பெட்டிகளுடனே இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அதேசமயம் சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர், கும்மிடிபூண்டி வழித்தடங்களில் இயக்கப்பட்டு வரும் ரயில்களில் 60 சதவீதம் வரையிலான ரயில்கள் 12 பெட்டிகளுடனும், 40 சதவீத ரயில்கள் 9 பெட்டிகளுடனுமே இயக்கப்பட்டு வருகின்றன.
மீதமுள்ள 40 சதவீத ரயில்களையும் 12 பெட்டிகளுடன் இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் முதல்கட்டமாக, திருவள்ளூர், கும்மிடிபூண்டி வழித்தடங்களில் உள்ள நடைமேடைகளை (Plotform) விரிவாக்கம் செய்யும் பணிகள் ஏறக்குறைய நிறைவடைந்துவிட்டன என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. படிப்படியாக இந்த ஆண்டு இறுதிக்குள் இவ்வழித்தடங்களில் அனைத்து ரயில்களும் 12 பெட்டிகளுடன் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.