வரிகள் செலுத்த அவகாசம் தந்துள்ள சென்னை மாநகராட்சி, அதற்கு பிறகும் வரிகள் செலுத்தவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
நிதி ஆதாரமாக பொதுமக்களிடம் இருந்து சொத்து வரி மற்றும் தொழில் வரி வசூலிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், நடப்பு 2022-23 நிதியாண்டு வருகின்ற மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவடைவதால் வரி செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்த நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
கால அவகாசம் முடிவதற்குள் நிலுவையை செலுத்தாவிட்டால் 2 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்றும், நீண்ட காலமாக வரி செலுத்தாதவர்களின் சொத்துகளுக்கு சீல் வைக்கப்பட்டும் எனவும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே, பொதுமக்கள் சட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாகாமல், கொடுக்கப்பட்டுள்ள அவகாசத்திற்குள் வரியை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி இதுவரை 1390 கோடி ரூபாய் சொத்து வரியாகவும், 412 கோடி ரூபாய் தொழில் வரியாகவும் வசூலித்துள்ளது.