சென்னையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கையை சென்னை மாநகராட்சி மீண்டும் தொடங்கியுள்ளது.
ஏறத்தாழ 80 சதவீதத்துக்கு அதிகமானோர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்தது. இந்தநிலையில், கடந்த 10 நாள்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மெல்லமாக அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் நாள் ஒன்றுக்கு 4,000-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். தமிழ்நாட்டிலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 200-யைக் கடந்துள்ளது. குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பு அளவு அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் தனிமைப்படுத்தலுக்கான அறிவிப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படும் என்றும், அதேபோல் கொரோனா தொற்று பாதித்தவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஓட்டப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளத்து.
முதல் கட்டமாக கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் மட்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.