போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர் போக்குவரத்து பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் போக்குவரத்துத்துறை செயலாளர் பிரபாகர்ராவ், நிதித்துறை கூடுதல் செயலாளர் உமாநாத், அனைத்து போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குநர்கள் மற்றும் 42 தொழிற்சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையின் முடிவில் தமிழக அரசு, போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 5.5% ஊதிய உயர்வு வழங்க ஒப்புக்கொண்டது. இந்த ஊதிய உயர்வை அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம் ஒப்புக்கொண்டாலும் சிஐடியூ உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்துள்ளன.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஆலோசனை நடத்திய தொமுச, சிஐடியூ உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் தமிழக அரசு அறிவித்துள்ள ஊதிய உயர்வை கண்டித்து, இன்று ஒருநாள் வேலைநிறுத்தம் செய்வது என அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த வேலை நிறுத்தத்திற்கு அண்ணா தொழிற்சங்கம் உள்பட சில தொழிற்சங்கங்கள் ஆதரவு தரவில்லை என்பதால் இன்று வழக்கம் போல் பேருந்துகள் ஓடும் என கூறப்படுகிறது.
English Summary : Transportation employees requests raise in pay Negotiation was conducted. It doesn’t satisfy the some employees, still buses will run asusual today.