நேஷனல் புக் டிரஸ்ட்’ மற்றும் பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் புத்தக கண்காட்சி நேற்று சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மிகச்சிறப்பாக தொடங்கியது. இந்தக் கண்காட்சியை தென்னிந்தியாவுக்கான மலேசியத் தூதர் சித்ராதேவி ராமய்யா நேற்று மாலை தொடக்கி வைத்தார். வரும் 23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில் பல்வேறு வகையான புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும், புத்தக பிரியர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்த புத்தகக் கண்காட்சி தினமும் பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கும் என்றும் விடுமுறை நாட்களில் மட்டும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தக கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் புத்தகங்களுக்கு 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த புத்தகக் கண்காட்சியை பார்வையிட ரூ.10 நுழைவுக்கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளி மாணவ மாணவியர்கள் அடையாள அட்டையுடன் வந்தால் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள். இந்த புத்தகக் கண்காட்சி குறித்த மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள www.chennaiputhagasangamam.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
English Summary : Book Fair Exhibition 2015 starts yesterday in Chennai.