ருத்ரா வீட்டில் வெடிக்கும் பூகம்பம்..!
வீட்டிற்கு தெரிய வரும் சிவா – சக்தியின் ரகசிய திருமணம்..!
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகாத்தொடர் “கண்ணெதிரே தோன்றினாள்”.
சக்தியாக சுவேதாவும், ருத்ராவாக மாளவிகா அவினாஷூம் நடிக்கும் இந்த தொடருக்கு குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், சக்தி – சிவாவின் ரகசிய திருமணம் ருத்ரா வீட்டில் பூகம்பத்தை கிளப்பி அதிர்ச்சியடைய வைக்கிறது.
ரத்னம் மீதான சந்தோகத்தை தொடர்ந்து கமலாவை மீண்டும் ருத்ரா வீட்டிற்கு அழைத்து வர, ரத்னம் அதிர்ச்சியடைகிறார். இதற்கிடையே ருத்ரா வீட்டிற்கு வரும் பூமிநாதனின் நண்பன் ருத்ராவுக்கு மறைமுகமாக தொல்லை கொடுப்பது யார் என்பதை தான் கண்டுபிடிப்பதாக உறுதியளிக்கிறார். பரபரப்பை கூட்டிய சிவா – சக்தியின் ரகசிய திருமணம் பற்றிய செய்தி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்க, தன் மகனை மடக்கியதாக இந்துமதி சக்தியை அடிக்க, செய்தியை வெளியிட்டது யார் என்பதை கண்டுபிடிக்க சிவாவும், சக்தியும் செல்கின்றனர்.
இதில், சிவா – சக்தியின் திருமண செய்தியால் நிகழப்போவது என்ன? திருமண செய்தியை வெளியிட்டவரை சிவா, சக்தி கண்டுபிடித்தார்களா? என்கிற எதிர்பார்ப்புகளுடன் தொடர் பல்வேறு திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.