பிரபல ஒப்பனை நிபுணரும் பயிற்சியாளருமான ரூபி ஹுசைன் தலைமையில் வருகிற, ஜூலை 12, 2023 – ஆம் தேதி, சென்னை, எலைட் பிரைடல் மேக்கப் சான்றிதழ் உடன் கூடிய பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் ரூபி ஹுசைன் அகாடமி பெருமிதம் கொள்கிறது.
ஒப்பனை கலைஞர் மற்றும் பயிற்சியாளராக 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், ரூபி ஹுசைன் தனது நிபுணத்துவத்தை சென்னையில் உள்ள ஒப்பனை கலைஞர்களுக்கு கற்பிப்பத்தின் மூலம் திருமண ஒப்பனை கலையில் சிறந்து விளங்க அவர்களுக்கு உதவும் வண்ணம் இந்த பயிற்சி அமையும்.
இந்த பயிற்சியானது ஜூலை 15, 2023 இல் தொடங்கி ஆகஸ்ட் 3, 2023 அன்று வரை நடைபெறும். இந்த ஒப்பனைகளை பயிற்சியானது தினசரி 4 மணி நேரம் நடைபெற உள்ளது.
இந்த பயிற்சியின் மூலம் பங்கேற்பாளர்கள் திருமண ஒப்பனை கலையில் கைதேர்ந்த அனுபவங்களையும் தங்களது திறன்களையும் மேம்படுத்திக் கொள்ள முடியும்.
மேக்கப் துறையில் Guild Training International UK சான்றிதழ் பெற்றவரான ரூபி உசைன், தன்னுடைய கை தேர்ந்த திறமையினாலும் இந்த தொழில்துறையில் அவர் செய்த அர்ப்பணிப்பினாலும் தனக்கென தனி ஒரு இடம் படைத்த நட்சத்திர பயிற்சியாளர் என்று கூறலாம்
ஒப்பனை கலைத்திறன் மீதான அவரது ஆர்வம், மற்றும் பல்வேறு கலாச்சார பின்னணியில் இருந்த மணப்பெண்களுடன் பணிபுரிந்த அவரது விரிவான அனுபவத்துடன், திருமணத் துறையில் நிபுணத்துவம் பெற விரும்பும் ஒப்பனை கலைஞர்களுக்கு அவரே சிறந்த வழிகாட்டியாக இருந்து வழி நடத்த விரும்புகிறார்.
1 – All about skin, type, prep
2 – Makeup and hairstyle tools
3 – Makeup product knowledge
4 – Colour wheel theory
5 – Foundation — corrector – concealer knowledge
6 – All about eye makeup, practice on a dummy
7 – Creating diff looks
8 – contouring, highlighting – theory
9 – Live demo and practice. Creating diff looks.
10 – Transfer-proof, water-resistant, sweat-resistant makeup
11 – Hair and hairstyle. Demo by a hairstylist ( 5 to 6 type ).
12 – Muhurrtam makeover, North Indian makeover, Christian bridal makeover.
ரூபி ஹுசைனின் நிபுணத்துவத்திலிருந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பு மற்றும் தனிப்பட்ட வழிகாட்டுதல்களை இந்த பயிற்சியின் மூலம் பங்கேற்பாளர்கள் முழுமையாக பெறலாம்.