புதிய கல்வி கொள்கையின்படி, மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு CUET எனப்படும் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத்தேர்வு (Common University Entrance Test) நடத்தப்பட்டு வருகிறது. மத்திய பல்கலைக்கழகங்களில் கலை மற்றும் அறிவியல் மற்றும் பிஸ்னஸ் மேனேஜ்மென்ட் துறைகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் CUET தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.

இந்நிலையில், மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான CUET தேர்வு முடிவுகள் வெளியானது. நாடு முழுவதும் 295 நகரங்களில் நடந்த CUET நுழைவுத்தேர்வை 9,76,908 மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகளை www.cuet.nta.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என தேசிய கல்வி முகமை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *