பொதுமக்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பொருட்களை அஞ்சல் நிலைய பார்சல் சேவை மூலம் அனுப்பலாம். இவ்வாறு அனுப்பப்படும் பார்சல்களை பேக்கிங் செய்ய சிறப்புக்கவுன்ட்டர் சென்னையில் உள்ள 8 அஞ்சல் நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
தி.நகர் தலைமை அஞ்சல் நிலையம், மயிலாப்பூர் தலைமை அஞ்சல் நிலையம், சூளைமேடு, கிரீம்ஸ் சாலை, கோபாலபுரம், தேனாம்பேட்டை, தி.நகர் வடக்கு மற்றும் திருவல்லிக்கேணி ஆகிய அஞ்சல் நிலையங்களில் சிறப்பு கவுன்ட்டர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த கவுன்ட்டர்களில் பொதுமக்கள் அனுப்பும் பார்சல்கள் தரம் வாய்ந்த அட்டைப் பெட்டிகள், டேப்புகள் மூலம் பேக்கிங் செய்யப்படும். பார்சலின் அளவு மற்றும் அனுப்பப்படும் பொருட்களைப் பொருத்து கட்டணம் வசூலிக்கப்படும்.
மேலும், அனுப்பப்படும் பார்சல் பெறுநர் முகவரிக்கு சென்று சேரும் வரை அதன் நிலை குறித்து பொதுமக்கள் அஞ்சல் துறை இணையதளம் மூலம் கண்காணிக்க முடியும் என சென்னை நகர மத்திய கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் திவ்யா சந்திரன் தெரிவித்துள்ளார்.