சென்னையில் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு மண்டலங்களில் நாளை (08.08.2023) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும்.
இதுகுறித்து சென்னை பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கீழ்ப்பாக்கம் குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீா் எடுத்துச் செல்லும் பிரதான உந்து குழாய் இணைப்புப் பணிகள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் ஸ்டொ்லிங் சாலையில் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதனால் தேனாம்பேட்டை மண்டலத்துக்குள்பட்ட நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, தியாகராய நகா், தேனாம்பேட்டை, ஆழ்வாா்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலத்துக்குள்பட்ட தியாகராயநகா், சி.ஐ.டி.நகா், சைதாப்பேட்டை மற்றும் அடையாறு மண்டலத்துக்குள்பட்ட சின்ன மலை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (08.08.2023) காலை 6 முதல் புதன்கிழமை (09.08.2023) காலை 6 மணி வரை குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும்.
இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீா் பெற்றுக்கொள்ள வாரியத்தின் இணையளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
குடிநீா் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீா் தொட்டிகள் மூலமும் தெருக்களுக்கு லாரிகள் மூலமும் குடிநீா் விநியோகம் வழக்கம்போல் தடையின்றி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.