தமிழக அரசு பள்ளிகளில் 2023 – 24ஆம் நடப்பு கல்வி ஆண்டில் 11ம் வகுப்பில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி, அரசு நடத்தும் திறனாய்வு தேர்வில் கலந்துகொண்டு முதல் 1000 மதிப்பெண்களை பெறும் மாணவ மாணவிகளுக்கு (500 மாணவர்கள், 500 மாணவிகள்) ஆண்டுக்கு பத்தாயிரம் வீதம் அவர்களின் இளங்கலை பட்டப்படிப்பு வரை உதவித்தொகை வழங்கப்படும்.
இதற்கான திறனாய்வு தேர்வு செப்டம்பர் 23ஆம் தேதி அன்று முதல் தாள் காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், இரண்டாம் தாள் பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையிலும் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது.
9 மற்றும் 10ம் வகுப்பு கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படும.
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை:
www.dge.tn.gov.in என்கிற இணையதளத்தில் 07.08.2023 முதல் 18.08.2023 ஆம் தேதிக்குள் மாணவர்கள் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். பின்பு சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகையாக ரூ.50ஐ சேர்த்து பள்ளித் தலைமையாசிரியரிடம் மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 18.08.2023