கடந்த ஆண்டு வெளியான அமீர்கான், அனுஷ்கா ஷர்மா நடித்த ”பிகே’ திரைப்படம் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் மிக அதிகமான வசூலை அடைந்து சாதனை படைத்தது. சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரு இந்திய படம் குவித்த அதிகபட்ச வசூல் இந்த படத்தினால் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தில் தன்னுடைய கதை திருடப்பட்டதாக கூறி எழுத்தாளர் ஒருவர் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஏற்கனவே ‘பிகே’ திரைப்படம் வெளிவருவதற்கு முன்பும், வெளிவந்த பின்னரும் பல வழக்குகளையும் சர்ச்சைகளையும் சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தில் ‘பாரிஷ்தா’ என்ற இந்தி மொழி புத்தகத்தின் குறிப்பிட்ட ஒருசில பகுதியை காப்பியடித்து, பிகே படம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரபல எழுத்தாளர் கபில் இஷாபுரி வழக்கு தொடுத்துள்ளார்.

பிகே படத்தின் இயக்குனர், வசனம் எழுதியவர் மற்றும் பட நிறுவனம் ஆகியோர்கள் தனது புத்தகத்தின் எழுத்துக்கள், வெளியிடப்பட்ட கருத்துக்கள் மற்றும் காட்சிகளை திருடிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ள அவர் தனக்கு தயாரிப்பாளர்களிடம் இருந்து ரூ.1 கோடி பெற்றுதர வேண்டும் என்று எழுத்தாளர் கபில் இஷாபுரி தனது மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இவரது மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் பிகே படத்தின் தயாரிப்பாளர் வினோத் சோப்ரா, இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி, சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள், வசனம் எழுதிய அபிஜாத் ஜோஷி ஆகியோர்களை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி சமீபத்தில் பிகே படக்குழுவினர் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி தங்கள் பதில்களை செப்டம்பர் 4ஆம் தேதி அளிப்பதாக கூறி உள்ளனர்.

English Summary : Writer Kapil isapuri claims that “PK” story was stole from him. He also demands Rs.1 crore as compensation.