தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த மார்ச் மாதம் 5ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெற்ற பிளஸ் 2 தேர்வுகளின் முடிவுகள் வரும் மே மாதம் முதல் வாரத்தில் வெளிவர வாய்ப்புள்ளதாக அரசுத் தேர்வுத்துறை இயக்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ் 2 தேர்வை சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் 2377 மையங்களில் எழுதியுள்ளனர். இந்த தேர்வின் விடைத்தாள்களை திருத்தும் பணி தற்போது முடிவடைந்துள்ளது.

விடைத்தாள்களின் மதிப்பெண்கள் சிடி மூலம் அரசு தேர்வுகள் இயக்ககத்துக்கு அனுப்பப்பட்டு அதன்பின்னர் பாட வாரியாக ஒவ்வொரு மாணவரின் மதிப்பெண் பட்டியல்களை கம்ப்யூட்டர் மூலம் தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த மதிப்பெண் பட்டியலை தயாரிக்க தேர்வுத் துறைக்கு இரண்டு வாரங்கள் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், வரும் மே மாதம் முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படலாம் என்றும் தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் தற்போது எஸ்.எஸ்.எல்.சி விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வருகின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

English Summary : When plus 2 result announce?