சமீபகாலமாக சமூக வலைதங்களில் கரகாட்டகாரன் 2 படம் “டப்பாங்குத்து”என்ற பெயரில் மதுரை சுற்று வட்டார பகுதியில் படமாகி கொண்டிருக்கிறது என்ற செய்தி வைரலாக பரவி வருகிறது.

இது குறித்து டப்பாங்குத்து இயக்குனர் ஆர்.முத்து வீராவிடம் கேட்டபோது,

மதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கோவில் திருவிழாக்களில் கரகாட்டம் நிகழ்ச்சி நடத்துவார்கள். அதை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டது கரகாட்டக்காரன் திரைப்படம்.

அதேபோல் மற்றொரு தெருக்கூத்து கலையை மையமாக வைத்து உருவாகி வருவதே டப்பாங்குத்து. கரகாட்டத்திற்கும், தெருக்கூத்து ஆட்டத்திற்கும் எப்படி சம்பந்தம் இல்லையோ அதே போல் கரகாட்டம் 2 க்கும், டப்பாங்குத்திற்கும் சம்பந்தமில்லை என விளக்கம் தந்த, இயக்குனர் ஆர்.முத்துவீரா மேலும் கூறுகையில்:

கரகாட்டம் போல் மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் திருவிழா நாட்களில் தெருக்கூத்து ஆட்டம் போடுவார்கள். அதில் ராஜா ராணி ஆட்டம், பேயாட்டம், டப்பாங்குத்து, கொலை சிந்து என வித விதமாக ஆடி பாடி விடியும்வரை ரசிக்க வைப்பார்கள். அந்த கலையை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டதே டப்பாங்குத்து திரைப்படம்.

தெருக்கூத்து ஆட்டம் தெருவில் நடக்கும்போது சுற்றி நூற்றுக்கணக்கான மக்கள் சிரித்து மகிழ்ந்து ரசிப்பார்கள். அதை அப்படியே திரையில் ரசிக்க டப்பாங்குத்து தயாராகி வருகிறது.

டப்பாங்குத்தில் 15 வகையான நாட்டுப்புற பாடலுக்கு சரவணன் இசையமைத்துள்ளார். தெருக்கூத்தில் ஆடும் அதே கலையை நடன இயக்குனர் தீனா நடனமாக தந்துள்ளார். எஸ்.ஜெகநாதன் மருதம் நாட்டுப்புற பாடல் என்ற நிறுவனத்திற்காக தயாரிக்க, கதை, திரைக்கதை, வசனம் எஸ்.டி,குணசேகரன், இயக்கம் -ஆர்.முத்து வீரா ,ஒளிப்பதிவு -ராஜா கே.பக்தவச்சலம், மக்கள் தொடர்பு – செல்வரகு, நடிகர்கள்: தெற்கத்தி பொண்ணு புகழ் சங்கரபாண்டி, தீப்தி, காதல் சுகுமார், துர்கா மற்றும் ஆண்ட்ரூஸ்.

கர்ணன் என்ற படத்தில் கிடக்குழி மாரியம்மா பாடிய “கண்டா வரச்சொல்லுங்க” என்ற பாடல் ராம்ஜி கேசட்டில் இடம் பெற்ற பாடல். அதே போல் டப்பாங்குத்து திரைப்படத்தில் ராம்ஜி கேசட்டின் உரிமை பெற்று 10 பாடல்கள் இடம் பெற்றுள்ளது இந்த படத்திற்கு ஒரு சிறப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *