புதியதலைமுறை தொலைக்காட்சி DW உடன் இணைந்து “ஈக்கோ இந்தியா” நிகழ்ச்சியை வாரம்தோறும் ஞாயிற்றுகிழமைகளில் மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது .
சுற்றுச்சூழல் பாதிப்புகள், பருவ நிலை மாற்றத்தின் விளைவுகள், நிலைத்தன்மை, சுற்றுச்சூழலை காக்கும் பாரம்பரிய முறைகள், புதிய தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவைகளுடன் இயற்கை சந்திக்கும் சவால்களுக்கு ஆக்கபூர்வமான தீர்வுகளை கண்டறியும் நிகழ்ச்சியாக ஈக்கோ இந்தியா திகழ்கிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் மூழ்கும் ஜோஷிமத் நகரத்தில் மக்களின் நிலை என்ன? அதிலிருந்து மனிதகுளம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன?,பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களுக்கு மாற்றாக தயாரிக்கப்படும் தென்னை ஓலை ஸ்ட்ராக்கள், சுற்றுலாப்பயணிகளால் பாதிப்புகளுக்கு உள்ளாகும் இயற்கையை காக்கும் வழிகள், உள்ளிட்டவைகள் குறித்து இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு ஈக்கோ இந்தியா நிகழ்ச்சியை புதியதலைமுறை தொலைக்காட்சியில் காணலாம். இந்நிகழ்ச்சியை பிரியதர்ஷினி தொகுத்து வழங்குகிறார்.