சென்னை ஐஐடி நிறுவனத்தில் படித்த முன்னாள் மாணவியும், ஐபிஎம் முதுநிலை ஆராய்ச்சியாளராக தற்போது பணிபுரிந்து வரும் சித்ரா துரை என்ற பெண்ணுக்கு “ஐபிஎம் சர்வதேச ஆராய்ச்சியாளர்’ என்ற உயரிய கௌரவத்தை ஐபிஎம் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த உயரிய கௌரவத்தைப் பெறும் முதல் இந்தியப் பெண்மணி இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1963ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஐபிஎம் நிறுவனம் உலக அளவில் சிறந்த ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றில் ஈடுபட்டு சாதனை செய்பவர்களுக்கு “ஐபிஎம் சர்வதேச ஆராய்ச்சியாளர்’ என்ற பட்டத்தை கொடுத்து கெளரவித்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் 4 முதல் 9 பேர்களை ஐபிஎம் கெளரவித்து வரும் நிலையில் 2015ஆம் ஆண்டின் “ஐபிஎம் சர்வதேச ஆராய்ச்சியாளர்’ பட்டத்திற்கு தேர்வு பெற்றவர்களில் சென்னையை சேர்ந்த சித்ரா துரை என்பவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை ஐஐடியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பொறியியல் பட்டப்படிப்பை முடித்த இவர், ஐபிஎம் நிறுவனத்தில் நிதித் துறையில் கடந்த 18 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி வருகிறார். நிதித் துறை தொடர்பான பல்வேறு தொடர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவரும் அவர், அண்மையில் வங்கி வீட்டுக் கடன் தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

இவருடைய தொடர் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை பாராட்டும் வகையில், இந்த உயரிய கௌவரத்தை ஐபிஎம் வழங்கியுள்ளதாக, சென்னை ஐஐடி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

English Summary : A former student of IIT Chennai International Award