புதுயுகம் தொலைக்காட்சியில் அக்டோபர் 1 நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி “நடிகர் திலகம் என்றென்றும்”
காலத்தால் மறக்க முடியாத பல காவிய படங்களை நமக்கு தந்த நடிகர் திலகம் அவர்கள் நினைவில் அவருடைய பிறந்தநாள் போற்றும் விதமாக ,அவருடைய திரைப்படங்களை கொண்டாடும் விதமாக அவருடைய ரசிகர்கள் ஒன்று திரண்டு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளனர் . இந்நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 1& 2 ஆம் தேதிகளில் ஞாயிறு மற்றும் திங்கள் கிழமை காலை 9:30 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது .
இந்த நிகழ்ச்சியில் திரை பிரபலம் நடிகர் எம் .எஸ் பாஸ்கர் தனது திரை பயணம், தான் நடிகர் திலகத்தை கண்ட பார்வை என பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார் .அவரோடு சிவாஜி கணேசன் ரசிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் முரளி ஸ்ரீனிவாசன் , திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் ,கண்ணதாசன் கலைக்கூடத்தின் திரு .காவிரி மைந்தன் ,சமூக ஆர்வலர் சிவாஜி ரவி, சிவாஜி ரசிகரும் எழுத்தாளருமான திரு பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர் .
இந்த நிகழ்ச்சியில் சிவாஜி ரசிகர்களும் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியின் இடையே சிவாஜி நடித்த சில சுவாரஸ்யமான காட்சிகளும்,அருமையான பாடல்களும் இடம்பெற்றன ,இந்த காட்சிகளை பற்றியும், பாடல்களைப் பற்றியும் சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டனர் .இந்நிகழ்ச்சியை தொகுப்பாளர் ஆர்த்தி தொகுத்து வழங்கினார்.