200 சதுர அடியில் ஒரு வீடு கட்டமுடியுமா? அதுவும் ஏழு வித்தியாசமான பொருட்களை வைத்து கட்டப்பட்ட வீடு. இந்த வாரம் புதிய தலைமுறையின் “வீடு” நிகழ்ச்சியில். வாரம் வாரம் வித்தியாசமான வீடுகளைத்தேடிக் கண்டுபிடித்து வீட்டின் அனைத்துக் கோணங்களையும் வித்தியாசமாக வழங்கி வருகிறது.
வீடுகள் எப்படி கட்டப்படுகின்றன, எந்தெந்த பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன, அதன் பட்ஜெட் என்ன? அடித்தளம் முதல் கூரை வரை என்னென்ன மாற்றுப் பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன போன்ற முழுத் தகவல்களையும் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஷ்ணு பரத் விளக்கமாக விவரிக்கிறார்.
வித்தியாசமான வீடுகளை தேடி நேயர்களின் பார்வைக்கு வைக்கும் வீடு நிகழ்ச்சி சனிக்கிழமை தோறும் மாலை 5:30 மணிக்கு புதிய தலைமுறையில் ஒளிபரப்பாகி வருகிறது.