சென்னை மக்கள், நகரில் காணப்படும் குறைகள் குறித்து புகார் அனுப்ப புதிய ஆப்ஸ் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ள இந்த ஆப்ஸ்க்கு ‘க்ளீன் சென்னை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சென்னையில் காணப்படும் குறைகளை பொதுமக்கள் நேரடியாக இந்த ஆப்ஸ் மூலம் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவிக்கலாம்.

இந்த ஆப்ஸ் மூலம் சென்னை மாநாகராட்சி பகுதிக்கு உட்பட்ட குப்பைத்தொட்டிகள், கழிவறைகள் போன்றவை எந்த நிலையில் உள்ளன என்பது குறித்த புகார்களை புகைப்படங்களுடன் அனுப்பலாம். புகார் பெறப்பட்ட ஒருசில மணி நேரங்களில் அந்த குறை நிவர்த்தி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

”பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்படும் என்றும் இதையடுத்து, அந்த புகார்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க இந்த ஆப்ஸ் பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் அம்மா உணவகத்தின் செயல்பாடு, சாலைகளின் தரம் என பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள அனைத்தையும் இந்த ஆப்ஸ் மூலம் மதிப்பீடு செய்ய விரைவில் வசதிகள் செய்யப்படும்” என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உடனே உங்கள் மொபைலில் ‘க்ளீன் சென்னை’ ஆப்ஸை பதிவு செய்து கொண்டு சென்னையில் குறைகளை தெரிவிக்க தயாராகுங்கள்.

English Summary : To gather feedback from the public regarding the city’s cleanliness, Chennai Corporation has launched a mobile app where Chennai people can post photos of garbage bins and public toilets across the city.