தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பாக பல்வேறு கல்வி உதவித் தொகையில் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பெற மாணவர்கள் பள்ளிகளில் உரிய முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், EMIS இணையதளத்தை லாகின் செய்து ‘மாணவர்கள்’ என்ற மெனுவை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் ஒவ்வொரு மாணவரின் பெயருக்கு எதிராக ஒரு குறியீடு இருக்கும். அதனை கிளிக் செய்து ‘Scholarship’ என்ற டேப்பை திறந்து உதவித்தொகை குறித்த விவரங்களை சரிபார்த்து தேவையான சாதி சான்றிதழ் எண், வருமான வரி சான்றிதழ் எண் ஆகியவற்றை பதிவிட வேண்டும்.
இத்தகைய பணிகளை நவம்பர் 15 ஆம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளும் முடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.