ஜெயா டிவியில் வரும் தமிழ்ப் புத்தாண்டு நாளன்று பிரபல பேச்சாளர் திரு.மணிகண்டன் தலைமையிலான சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது.

“குடும்பத்தை நடத்துவதில் புத்திசாலிகள் ஆண்களா, பெண்களா “என்ற தலைப்பில் இந்த சிறப்பு பட்டிமன்றம் நடைபெறுகிறது.

குடும்பத்தை திறம்பட நடத்துவதில் புத்திசாலிகள் ஆண்களே என்ற அணியில் திரு.ரவிக்குமார், திரு.உமாசங்கர், திரு.காளிதாஸ் ஆகியோரும், பெண்களே என்ற அணியில் திருமதி.நித்தியப்ரியா, செல்வி.ஹேமா, திருமதி.அன்னலட்சுமி ஆகியோரும் பங்கேற்று மிகச் சிறப்பான முறையில் தங்கள் கருத்துக்களை எடுத்து வைக்கின்றனர்.

நிகழ்ச்சியின் நிறைவுப்பகுதியில் இரு தரப்பு வாதங்களை சீர்தூக்கி, பகுப்பாய்ந்து அற்புதமான தீர்ப்பை நிகழ்ச்சியின் நடுவர் மணிகண்டன் வழங்கவுள்ளார்.

இந்நிகழ்ச்சி தமிழ்ப் புத்தாண்டு நாளான ஏப்ரல் 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

“பேட்ட ராப்” (Petta raap)

ஜெயா தொலைக்காட்சியில் தமிழ் புத்தாண்டு அன்று மாலை 5:00 மணிக்கு ஒளிபரப்பப்படும் சிறப்பு நிகழ்ச்சி .“பேட்ட ராப்” (Petta raap)

தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக உங்கள் கண்களுக்கு விருந்து படைக்க வரும் அட்டகாசமான நடன நிகழ்ச்சி “பேட்ட ராப்” (Petta rap).இதில் ஜெயா மேக்ஸ் தொகுப்பாளர்கள் இரண்டு அணியாக பிரிந்து யார் நடனத்தில் புலி என்று காட்ட உள்ளனர். முதல் அணியில் தொகுப்பாளர்கள் இளவேனில் , சோனி , மனோஜ் மற்றும் இரண்டாவது அணியில் ஹரிஷ் க்ரிஷ் ,ரத்னா ,மற்றும் சரண்யா. கலந்து கொண்டு இந்த நடன நிகழ்ச்சியை மேலும் கலகலப்பாக கொண்டு சென்றனர். இந்நிகழ்ச்சியில் தொகுப்பாளர்கள் கார்த்திக் ராமதுரை மற்றும் ஹரிதர்சன் இணைத்து இந்நிகழ்ச்சியை மேலும் சுவாரசியமாகவும் ரசிக்கும் படியாகவும் தொகுத்து சென்றனர்.

“நாளை நமதே”

ஜெயா டிவியில் வரும் தமிழ்ப்புத்தாண்டன்று ஒளிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சி ‘நாளை நமதே’. இதில் தமிழகத்தின் பிரபல ஜோதிடர்களான திரு.ஹரீஷ் ராமன், நங்கநல்லூர் பஞ்சநாதன், திருக்கோயிலூர் ஹரிபிரசாத் ஷர்மா, மயிலாடுதுறை சுந்தரமூர்த்தி ஆகியோர் பங்கேற்று புதிதாக பிறக்கவிருக்கும் க்ரோதி ஆண்டு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கும் எப்படியிருக்கப்போகிறது என்பது குறித்து விரிவாக கணித்துச் சொல்லவுள்ளனர். அதோடு, தமிழ்ப்புத்தாண்டு பற்றிய ஆன்மீகம், ஜோதிடம் மற்றும் வானவியல் சார்ந்த அரிய தகவல்களையும் இந்நிகழ்ச்சியில் ஜோதிட வல்லுனர்கள் நேயர்களுடன் பகிர்ந்துகொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்ச்சியை உமா தொகுத்து வழங்குகிறார். ’நாளை நமதே’ நிகழ்ச்சி தமிழ்ப்புத்தாண்டான ஏப்ரல் 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *