இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அன்றாடம் நடைபெறக் கூடிய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு “இன்றைய உலகம் இன்றைய இந்தியா” என்ற பெயரில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தினசரி ஒளிபரப்பாகிறது. காலை 7.30 மணிக்கும் மாலை 4.00 மணிக்கும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அரைமணி நேர தொகுப்பில் உலகச் செய்திகள், தேசியத் செய்திகள் இரு பிரிவுகளாக இடம் பெறுகின்றன. முதலாவதாக இடம் பெறும் உலகச் செய்திகள் பிரிவில் சர்வதேச நிகழ்வுகள் குறித்த தலைப்புச்செய்திகள் இடம்பெறுகின்றன. இதைத் தொடர்ந்து அரசியல் … தேர்தல்… போர்… பேச்சுவார்த்தைகள் …விழாக்கள்… விபத்துகள்…என அனைத்து வகையான செய்திகளும் செறிவாகவும் சுருக்கமான வகையிலும் இடம் பெறுகின்றன.
சர்வதேச அளவில் பிரபலமான செய்தி நிறுவனங்களிடம் இருந்து காட்சி முக்கியத்துவம் மிக்க செய்திகள் பெறப்பட்டு அவை காண்போரை கவர்ந்திழுக்கும் வகையில் வழங்கப்படுகிறது. இரண்டாவது பிரிவில் அனல் பறக்கும் தேசிய அரசியல் செய்திகள், தலைவர்களின் வார்த்தைப்போர்கள் என செய்திகள் விறுவிறுப்பாக வழங்கப்படுகிறது. இவை மட்டுமல்ல பல்வேறு மாநிலங்களில் நிகழக்கூடிய கலை கலாசார நிகழ்வுகள், விழாக்கள், சுவாரசிய சம்பவங்கள் போன்றவையும் பார்வையாளர்களுக்கு விருந்து படைக்கின்றன. நறுமண மலர்கள் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை போல் உருவாக்கப்படும் ஒவ்வொரு தொகுப்பும் காண்போரை காந்தமாக கவர்ந்திழுக்கின்றன.