சென்னை நகரில் இதுவரை 15.25 மீட்டர் உயரத்திற்கு மட்டுமே கட்டிடங்கள் கட்ட சிஎம்டிஏ அனுமதி வழங்கி வந்தது. மருத்துவமனை கட்டிடங்கள் மட்டும் 17 மீட்டர் உயரத்திற்கு கட்ட அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் கன்பென்ட்ரேஷ்ன் ஆப் ரியல் எஸ்டேட் டெவலப்பர்ஸ் அசோசியேஷன் (Confederation of Real Estate Developer’s Association) அளித்த பரிந்துரையை அடுத்து இனிமேல் சென்னையில் மருத்துவமனை கட்டிடங்கள் மட்டுமின்றி சிறப்புக் கட்டடங்கள் மற்றும் மேம்பாட்டுக் குழு கட்டடங்களும் 17 மீட்டர் உயரத்துக்குக் கட்ட அனுமதி வழங்கப்படும் என சிஎம்டிஏ முடிவு செய்துள்ளது.

இந்த முடிவு தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினருடன் ஆலோசனை செய்த பின்னர் சிஎம்டிஏ எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிஎம்டிஏ எடுத்துள்ள இந்த முடிவை CREDAI அமைப்பின் தேசிய சேர்மன் டி.சிட்டிபாபு வரவேற்றுள்ளார். இந்த முடிவு பெரிய கட்டிடங்கள் கட்டுபவர்களுக்கு வசதியாக இருக்கும் என்றும் இதனால் அடுக்குமாடி வீடுகள் பெரிய அளவில் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

English Summary : CMDA approved to build 17m tall building in Chennai other than Hospital. CMDA now announces that Special buildings and Development Committee buildings can now build upto 17m height.