சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே பெங்களூரு – சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை தடம் புரண்டதால் அந்த வழியே வந்த அனைத்து புறநகர் ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. எனவே காலையில் சென்னை நகருக்கு அலுவலகத்திற்கு வந்த ரயில் பயணிகள் அனைவரும் பெரும் தொல்லைக்கு ஆளானார்கள்.

இன்று காலை 4.30 மணியளவில் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வந்த மெயில் ரயில் பேசின் பிரிட்ஜ் பாலத்தை கடந்தபோது எதிர்பாராதவிதமாக தடம் புரண்டது. இந்த விபத்தில் ரயிலில் முதல் வகுப்பு ஏ.சி. பெட்டி, இரண்டாம் வகுப்பு ஏ.சி. பெட்டி என இரண்டு பெட்டிகள் மட்டும் தடம் புரண்டன. பேசின் பிரிட்ஜ் அருகே பொதுவாக அனனத்து ரயில்களும் குறைவான வேகத்தில்தான் வரும். அதுபோலவே இந்த ரயிலும் மெதுவாக வந்ததால் உயிரிழப்பு அதிர்ஷ்டவசமாக ஏற்படவில்லை. மேலும் பயணிகள் யாருக்கும் காயம் அடையவில்லை. தடம்புரண்ட இரண்டு பெட்டிகளிலும் இருந்த பயணிகள் வேறு பெட்டிகளுக்கு பத்திரமாக மாற்றப்பட்டனர். உடனடியாக மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

அதிகாலையில் இந்த விபத்து ஏற்பட்டதால் இந்த வழியே வந்த ரயில்கள் அனைத்தும் மிகவும் தாமதமாகவே சென்றது. குறிப்பாக சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக புறநகர் மின்சார ரயில் கள் அனைத்தும் பேசின் பிரிட்ஜில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அனைவரும் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் இறங்கி பீச் ரயில் நிலையத்துக்கு அவசர அவசரமாக சென்றனர். ஒருசிலர் ஆட்டோக்கள் மூலம் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றனர்.

தற்போது தடம்புரண்ட ரயில் அகற்றப்பட்டு இயல்பு நிலை திரும்பியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

English Summary : Chennai-Bangalore train derailed on 4.30am this morning near Basin Bridge. So all suburban trains that passes through same track are stopped.