சிவகார்த்திகேயன் – ஸ்ரீதிவ்யா நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை இயக்கிய இயக்குனர் பொன்ராம் மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய படம் ‘ரஜினிமுருகன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை லிங்குசாமி தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.

விரைவில் வெளிவர இருக்கும் ‘ரஜினிமுருகன்’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனமான வேந்தர் மூவீஸ் ரூ.35கோடிக்கு பெற்றுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. சிவகார்த்திகேயனின் படங்களுக்கு நல்ல ஒப்பனிங் இருப்பதாலும், அவருடைய சமீபத்தில் படங்கள் நல்ல வெற்றியை கொடுத்ததாலும், இந்த பெரிய தொகை வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. எப்படியிருந்தாலும் சிவகார்த்திகேயன் படத்துக்கு இது பெரிய விலை என்றே கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை, வெளிமாநில உரிமை மற்றும் வெளிநாட்டு உரிமை ஆகியவற்றை கணக்கிட்டால் இந்த படத்தின் வியாபாரம் ரூ.50 கோடியில் இருந்து ரூ.60 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இதே ரீதியில் சிவகார்த்திகேயன் சென்றால் மிக விரைவில் அவர் அஜீத், விஜய்யை நெருங்கிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அஞ்சான், உத்தம வில்லன் ஆகிய படங்களால் நஷ்டமடைந்த லிங்குசாமிக்கு இந்த படம் பெரிய லாபத்தை பெற்று தரும் என்றும், இதனால் அவருடைய பொருளாதார சிக்கல்கள் இந்த படத்தின்மூலமே தீர்ந்துவிடும் என்று கூறப்படுகிறது.

English Summary : Vendhar movies bought “Rajini Murugan” for 35 crores.