சகோதர, சகோதரி உறவை வலுப்படுத்தும் ரக்ஷா பந்தன் தினம் கடந்த சனிக்கிழமை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னையில் ரக்ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு இலவசமாக விபத்துக் காப்பீட்டுத் திட்டத்துக்கான பாலிசிகள் வழங்கப்பட்டது.
சென்னையில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பெண்களுக்கு ராக்கி கயிறு கட்டி இலவசமாக விபத்துக் காப்பீட்டுத் திட்டத்துக்கான பாலிசிகள் வழங்கப்பட்டன. சென்னை வேளச்சேரியில் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு ராக்கி கயிறு கட்டி சகோதரத்துவத்தை வெளிப்படுத்தினார். மேலும், 200-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவசமாக விபத்துக் காப்பீட்டுத் திட்டத்துக்கான பாலிசிகளையும் அவர் வழங்கினார்.
இதேபோல சென்னையின் மற்றொரு பகுதியான மயிலாப்பூரில் மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் முன்னிலையில் ராக்கி கயிறு கட்டி பாஜகவினர் ரக்ஷா பந்தன் விழாவைக் கொண்டாடினர். இதையொட்டி, 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவசமாக விபத்துக் காப்பீட்டுத் திட்டத்துக்கான பாலிசிகள் அவர் வழங்கினார்.
பிரதமர் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.12மட்டுமே ஆண்டு பிரீமியமாகச் செலுத்தி ரூ.2 லட்சத்துக்கான விபத்துக் காப்பீட்டைப் பெற முடியும் என்று வானதி சீனிவாசன் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
English Summary:Free Policies to Raksha Bandhan in Chennai Womens.